தொல்காப்பிய நூன்மரபும் பைத்தான் நிரலாக்கமும் (நான்கு வாரம்)
Four weeks Course on Tolkaappiya Nuunmarapu and Python coding aspect (Four Week Course)

தொல்காப்பிய நூன்மரபும் பைத்தான் நிரலாக்கமும் (நான்கு வாரம்) free download
Four weeks Course on Tolkaappiya Nuunmarapu and Python coding aspect (Four Week Course)
தொல்காப்பியம் -நூன்மரபு எனும் தலைப்பிலான இவ்வகுப்பு தொல்காப்பியம் முன்வைக்கும் தமிழ்மொழியின் எழுத்தமைதிகளைப் புரிந்துகொள்ள உதவும். தமிழ்மொழியைப் பேச்சளவில் பயன்படுத்துவோருக்கு, எழுதிப் பழகவும், இலக்கியத்தில் திளைக்கவும் பயன் நல்கும். தமிழ்மொழியின் எழுத்தமைப்பில் இருக்கும் ஒவ்வொரு கூறுகளின் தன்மைகளைத் தொல்காப்பியம்வழிப் புரிந்துகொள்ளவும் உதவும். தொல்காப்பிய நூன்மரபில் எழுத்துக்கள் அறிமுகம், எழுத்துக்கள் ஒலிக்கும் மாத்திரை அளபுகள், எழுத்துக்களின் வடிவங்கள், எழுத்துக்களின் வகைகள், எழுத்துக்களின் மயக்கங்கள் ஆகிய கருத்தியல்கள் முன்வைக்கப்பெற்றுள்ளன. அதனை அறிமுகப்படுத்தும் முகமாக இவ்வகுப்பு அமைகின்றது.
இப்பாடம் இரண்டு வாரகாலப் பாடமாக அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதனைக் கற்போர் தொல்காப்பிய நூன்மரபு முன்வைக்கும் கருத்துக்களை அறியலாம்.
தொல்காப்பியத்தின் 3 அதிகாரங்களில் முதல் அதிகாரம் எழுத்ததிகாரம். எழுத்ததிகாரத்தில் முதலாவது இயல் நூன்மரபு. நூல் எழுத்து வடிவில் உள்ளது. எனவே நூல் என்பது எழுத்தைக் குறிக்கும் (ஆகுபெயர்). எழுத்தின் மரபு பற்றிக் கூறுவதால் இந்த இயல் நூன்மரபு எனப்பட்டது. இவ்வியலில் முப்பத்திமூன்று நூற்பாக்கள் காணப்படுகின்றன. எழுத்து என்றாலே அது முதலெழுத்தைக் குறிக்கும். இவை 30 (உயிரெழுத்து 12 & மெய்யெழுத்து 18) இவை எந்தச் சார்பும் இல்லாமல் தனித்து ஒலிக்கக்கூடியவை. சார்பெழுத்துகள் மொழியைச் சார்ந்து வரும்போதுதான் தன் ஒலிப்பைப் புலப்படுத்தும்.
எழுத்தின் இனம்
மரபுவழி அடுக்காகிய தமிழ் நெடுங்கணக்கு, இனப்பாகுபாடுகள், ஒன்றோடொன்று மயங்கும் நிலை முதலானவை இந்த இயலில் கூறப்பட்டுள்ளன. உயிரெழுத்துகள் குறில், நெடில் என மாத்திரை நோக்கில் இனப்படுத்தப்பட்டுள்ளன. மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் எனப் பாகுபடுத்தப்பட்டுள்ளன. பொருளைப் புலப்படுத்தும் சுட்டெழுத்துகள், வினாவெழுத்துகள் இடைச்சொல்-எழுத்துகள் சுட்டப்பட்டுள்ளன.
மக்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் மயங்குவது போல எழுத்துகள் ஒன்றோடொன்று மயங்கும் எழுத்து மயக்கம் மரபியல் கண்ணோட்டத்தில் வகுத்துக் காட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தொல்காப்பிய காலத்துக்கு முந்திய மரபுநெறி என்பதை இந்த இயலுக்குச் சூட்டப்பட்டுள்ள 'நூல்-மரபு' என்னும் பெயராலும், 'என்ப' என முன்னோரைச் சுட்டிச் சொல்லும் குறிப்பு இந்த இயலில் மட்டுமே ஆறு இடங்களில் வருவதாலும் அறியலாம் (விக்கிப்பீடியா தரும் குறிப்பு).
இப்படிப் பல்வேறு நுட்பமான மொழிபற்றிய அறிவைத் தொல்காப்பியம் நமக்கு வழங்குகின்றது. அதில் நூன்மரபு தரும் செய்திகளை இப்பாடம் முன்வைக்கின்றது.
கணினி மொழியில் பைத்தான் அறிமுகம் உள்ளது.
பைத்தான் நிரலாக்கம் மூலமாக மெய்ம்மயக்க விதிகளை உருவாக்கும் வழிமுறைகள் தரப்பெற்றுள்ளன.
ஆணைத்தொடர் உருவாக்கும் படிநிலைகளும் உள்ளன.
ஒவ்வொரு நிலையிலும் தன்நிலை அறிதல் வினாக்கள் தரப்பெற்றுள்ளன. அதன் மூலமும் நீங்கள் இப்பாடத்தை கூடுதலாக அறிந்து கொள்ளலாம்.
இறுதியில் இப்பாடத்தை முடித்தமைக்கான சான்றிதழையும் பெறலாம்.