Learn Chess Basics in Tamil

சதுரங்க அடிப்படைகள், காய் நகர்வுகளில் தொடங்கி , கடினமான சதுரங்க வித்தைகளையும் அறிந்து கொள்ளலாம்

Learn Chess Basics in Tamil
Learn Chess Basics in Tamil

Learn Chess Basics in Tamil free download

சதுரங்க அடிப்படைகள், காய் நகர்வுகளில் தொடங்கி , கடினமான சதுரங்க வித்தைகளையும் அறிந்து கொள்ளலாம்

    சதுரங்க அடிப்படைகள், காய் நகர்வுகளில் தொடங்கி , கடினமான   , துள்ளியமான சதுரங்க வித்தைகளையும் அறிந்து கொள்ளலாம்  .

                              சதுரங்கம் இந்தியாவில் உருவாகி இன்று உலகம் முழுவதும் விளையாடப்படும் ஒரு புகழ்பெற்ற விளையாட்டு . சதுரங்கம் மனித இனத்தின் பிரபல விளையாட்டுகளில் ஒன்றாகும். இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, ஒரு கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு. இது சில சமயம் ஒரு போர் விளையாட்டாகவும், "மூளை சார்ந்த  போர்க்கலை"யாகவும் பார்க்கப்படுவதுண்டு. வெறும் 64 சதுரங்களை மட்டுமே உள்ளடக்கிய இந்த விளையாட்டினை முழுமையாக புரிந்துகொண்டவர் எவரும் இலர். அறிவாளிகளின் விளையாட்டு என்று   பல்லாண்டாக புகழ்ப்பெற்ற ஒரே விளையாட்டு சதுரங்கம் மட்டுமே.


இந்த விளையாட்டு நமக்கு பல வேளைகளில்  வாழ்க்கை உண்மைகளையும் கற்று தருகிறது. உதாரணத்திற்கு ஒரு தவறான நகர்வு சதுரங்க விளையாட்டினை மட்டுமில்லாமல் நம் வாழ்க்கையையும் புரட்டிப்போடும் வல்லமை  உடையது என்பதை இந்த விளையாட்டு நமக்கு உணர்த்துகிறது. இந்த வகுப்பில் இந்த அருமையான விளையாட்டினை பற்றி அறிந்து கொள்வோம். சதுரங்கம் ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு  . சுவாரஸ்யமானது மற்றுமின்றி மிகவும் ஆழமானதும் , சிந்தனையினை சோதிக்கும் விளையாட்டும் ஆகும்.


இந்த விளையாட்டின் அடிப்படைகளை நாம் தெளிவர புரிந்துகொள்வதினால்  நாம் ஒவ்வொரு நகர்வும் ஏன் செய்கிறோம் என்பதில் ஒரு புரிதல் ஏற்படும்.        சதுரங்க அடிப்படைகள், காய் நகர்வுகளில் தொடங்கி , கடினமான   , துள்ளியமான சதுரங்க வித்தைகளையும் அறிந்து கொள்ளலாம் .இந்த  வகுப்பு சதுரங்கத்தில் அறிமுகமே இல்லாதவர்களுக்கும் ,  சதுரங்க விளையாட்டில் தொடக்க நிலையிலும் , இடைநிலையிலும் உள்ளவர்களுக்கும்  ஏற்றதாகும்.  இந்த வகுப்பின் இறுதியில் இதில் சொல்லப்பட்டுள்ள சதுரங்க   tactics , strategies  போன்றவைகளை உங்களால் திறம்பட விளையாட்டில் செயல்படுத்த முடியும். மேலும் சதுரங்க விளையாட்டின் தொடக்கப்பகுதியிலும் ( OPENING ) இறுதியிலும் (ENDGAME MATES ) விளையாடும் முறைகள் பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும் .  இந்த வகுப்பு சதுரங்கத்தில் ஆர்வம் உள்ள அனைவருக்குமானது. இது நீங்கள் தற்போது சதுரங்கத்தில் இருக்கும் நிலையில் இருந்து உங்களை அடுத்த நிலைக்கு கொண்டு சொல்லும் . உங்கள் சதுரங்க விளையாட்டு பயணத்திற்கு இது ஒரு சிறந்த தொடக்கமாக அமையும்.

   


.


.